×

15-18 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஒடுகத்தூர், பேரணாம்பட்டில்

குடியாத்தம், ஜன.8: தமிழகத்தில் கொரோனாவை தொடர்ந்து, உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. ஒமிக்ரான் தாக்கம் யர்ந்து கொண்டிருப்பதால், குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி ேநற்று முன்தினம், பேரணாம்பட்டு வி.கோட்டா ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி, குடியாத்தம் அடுத்த பல்லகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மேல்பட்டி மருத்துவ குழுவினர் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தினர். இந்த முகாம் ஏற்பாடுகளை பேரணாம்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி செய்திருந்தார்.

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பிச்சை தலைமை தாங்கினார். பிடிஏ தலைவர் என்.பிரபு, கல்விக் குழு தலைவர் ஜெயந்தி வெங்கடேசன், நகர செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைதொடர்ந்து, டாக்டர் தீபிகா தலைமையிலான குழுவினர் 1438 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள். இதேபோல், அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு தடுப்பூசி முகாமை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், ஒன்றிய சேர்மன் சி.பாஸ்கரன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Odugathur, ,Peranampattu ,
× RELATED பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை