×

பெரணமல்லூர் அருகே கால்நடை சுகாதார பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

பெரணமல்லூர், ஜன.8: பெரணமல்லூர் அருகே கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் நடந்த கால்நடை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பெரணமல்லூர் அடுத்த ஆனைபோகி பகுதியில் நடந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து முகாமில் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட சுமார் 350 கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சித்திரவேல், ஏழுமலை ஆகியோர் கோமாரி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், மலடுநீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளித்தனர். மேலும் கால்நடைகளை சிறப்பாக பராமரித்த உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பால் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நூர்லா அமீன் நன்றி கூறினார்.

போளூர்: கேளூர் கால்நடை மருந்தகம் சார்பில் கேளூர் -துரிஞ்சிகுப்பம் ஆகிய கிராமங்களில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஒன்றிய குழு உறுப்பினர் ப.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் க.செல்வரசு முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் வி.சிவகாமி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் பா.ஆர்த்தி பாஸ்கரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கினார். கால்நடைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் எஸ்.கருணாநிதி தடுப்பூசி போட்டார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் சி.குஷ்புசின்னப்பன், ரா.வளர்மதிராமச்சந்திரன், ப.மீனாபழனி, பி.கோமதி பிரபாகரன், செ.அமுதா செல்வாராஜி எஸ்.வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கேளூர் ஊராட்சியில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது .துணை தலைவர் ஏ.தாமரை செல்வி ஏழுமலை முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் வி.சோக்குமார் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் அ.சங்கீதா அன்பழகன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் கால்நடை உதவி மருத்துவர் எஸ்.கருணாநிதி தடுப்பூசி போட்டார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags : Veterinary ,Camp ,Peranamallur ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...