×

ராஜபாளையம், திருத்தங்கல்லில் ெபாங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

ராஜபாளையம், ஜன. 8: ராஜபாளையம் ஒன்றியம், ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சி, மேலவரகுணராமபுரம் கிராமத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், 400 பேருக்கு ெபாங்கல் பரிசு தொகுப்பு வழங்கி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய கவுன்சிலர் அரிராம் சேட், ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, கிளை கழக நிர்வாகிகள் கடற்கரை கிருஷ்ணன், மல்லிகை பூ மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சிவகாசி அருகே திருத்தங்கல் ரேஷன் கடையில் திமுக பொறுப்பாளர் உதயசூரியன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பையை வழங்கினார். இதில் திருத்தங்கல் முன்னாள் கவுன்சிலர்கள் கருணாநிதி பாண்டியன், குருசாமி, நிர்வாகிகள் வெங்கடேஷ், ராஜேஷ், மாரீஸ்வரன், ராணி, பிச்சைக்கனி, தமிழரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags : Pongal ,Rajapalayam, Tiruthangal ,
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா