கொரோனா, ஒமைக்ரான் தொற்றிற்கு 22 இடங்களில் சிகிச்சை

விருதுநகர், ஜன. 8: விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்: மாவட்டத்தில் கொரோனா, ஒமைக்ரான் நோய் அறிகுறிகள் தென்படுவோர், இதர காரணங்களுக்காக  கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டியவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 9 அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை செய்யலாம். பரிசோதனை முடிவுகள் இரு தினங்களில் எஸ்எம்எஸ் மூலம் சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் virudhunagar.tn.nic.in என்ற இணையதளத்திலும் அறியலாம்.

கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, கல்லமநாயக்கன்பட்டி ஆகிய 9 அரசு மருத்துவமனைகள், சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனை,

கன்னிசேரிபுதூர், பந்தல்குடி, எம்.ரெட்டியபட்டி, மல்லாங்கிணர், நரிக்குடி, எம்.புதுப்பட்டி, உப்பத்தூர், ஆர்.ரெட்டியபட்டி, ஜமீன்கொல்லங்கொண்டான், குன்னூர், தாயில்பட்டி ஆகிய 11 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: