நகராட்சி உதவியாளர் போடியில் தற்கொலை

போடி, ஜன. 8: போடி வஉசி நகர் மேற்குத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(46). இவருக்கு சொந்த ஊர் கம்பமாகும். போடி நகராட்சி அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று ரேஷன்கடையில் பெங்கல் தொகுப்பு வாங்க கம்பத்திற்கு சென்று வாங்கி இரவு வீடு வந்துள்ளார். மறுநாள் காலை 10 மணிக்கு அவரது மனைவி முருகேஸ்வரி (43) அறைக்கதவையை திறந்து பார்த்த போது மாரியப்பன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. புகாரின் பேரில் போடிநகர் எஸ்ஐ மணிகண்டன், மாரியப்பன் உடலை மீட்டு போடி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். குடி பழக்கம் உள்ள மாரியப்பன் அதை விட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக  போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories: