பெரியகுளம் அருகே விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

தேவதானப்பட்டி, ஜன. 8: பெரியகுளம் அருகே ஜல்லிபட்டியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலசலிங்கம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி கிராமத்தில், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி விவசாயிகளின் அனுபவங்கள் மற்றும் விவசாயிகளுக்கு தற்போதைய தொழில்நுட்பங்களில் வேளாண்மை செய்தல் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

இயற்கை உரம் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும் என இயற்கை உரம் தயாரிப்பு, மீன்அமிலம் செய்முறை மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து நேற்று மாணவர்கள் விளக்கி கூறினர். ரசாயன உரத்தை குறைத்து இயற்கை உரம் பயன்பாட்டை அதிகரித்து அதிக மகசூல் பெறுவது குறித்து கூறினர். இந்த விழிப்புணர்வு முகாமினை அஸ்வின், செல்லப்பாண்டி, கார்த்திக்ராஜா, திவாகர், தினேஷ், கண்ணா, ராஜசேகர் ஆகிய மாணவர்கள் செய்திருந்தனர்.

Related Stories: