×

இளையான்குடியில் இல்லம்தேடி கல்வி திட்ட நிகழ்ச்சி

இளையான்குடி, ஜன.8: இளையான்குடி அருகே கண்ணமங்கலத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், வட்டார அளவில் இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு  வட்டார கல்வி அலுவலர்கள் வசந்தி, சார்லஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கற்பதும், கற்பித்தலும் குறித்த விளக்கமும், உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் வட்டார வள மேற்பார்வையாளர் பிரான்சிஸ், தலைமையாசிரியர்கள் கரோலின், பஞ்சகல்யாணி, ஆசிரியர் பயிற்றுனர் சம்சும்ஆரிபா, தன்னார்வலர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Ilayankudi ,
× RELATED இளையான்குடியில் கால்நடை கல்லூரி அமைக்க கோரிக்கை