பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பாச்சேத்திக்கு பஸ் போக்குவரத்து தொடக்கம்

மதுரை, ஜன.8: மதுரை லோக் அதாலத் நீதிமன்ற உத்தரவால் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பாச்சேத்திக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்தவர் சரவணக்குமார், மதுரை நிரந்தர லோக் அதாலத் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பாசேத்திக்கு இயக்கப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்கவும், ஊருக்குள் சென்று வந்த நகர், புறநகர் பேருந்துகளை மீண்டும் ஊருக்குள் வந்து செல்லும் வகையில் இயக்குமாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரஜினி, திருப்பாச்சேத்திக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் நகர் மற்றும் புறநகர் பேருந்துகளை திருப்பாச்சேத்தி வழித்தடத்தில் இயக்க மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: