திண்டுக்கல்லில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

திண்டுக்கல், ஜன. 8:திண்டுக்கல்லில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் செட்டிகுளம் அருகே கடந்த 2ம் தேதி ராகேஷ்குமார் (26) என்ற வாலிபரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், செட்டிகுளத்தில் மீன்பிடிக்க குத்தகை எடுத்ததில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்டு ராஜேஷ்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் உத்தரவிட்டார். இதையடுத்து தாலுகா இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

 இதுதொடர்பாக மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (36), மரிய பிரபு (37), ஜான் சூர்யா (27), பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (23), மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த ஜிம்ஜான் (43), ஆட்டோ ஆனந்த் (43), இருதயராஜ் (35), பாஸ்டின் நேபக் (27), சிங்கராயர் (41) ஆகிய 9 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் லியோ சாண்டிலியன் (28) என்பவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். திண்டுக்கல்-நத்தம் சாலையில் ரெட்டியபட்டி அருகே பதுங்கி இருந்த லியோ சாண்டிலியனை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: