வத்தலக்குண்டு அருகே அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

வத்தலக்குண்டு, ஜன. 8:வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் நடகோட்டை ஊராட்சி பகுதியில், அரசு மக்களுக்கு கொடுத்த இலவச இடத்தையும், அரசு புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து ஒரு தனியார் சோலார் நிறுவனம்  சோலார் பேனல் அமைக்க பணிகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகம் ,வட்டாட்சியர் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் நடகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீண்டும் அரசு கைப்பற்ற வேண்டும்   என கோரிக்கை விடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: