ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஊட்டி, ஜன.8: ஏஐடியுசி மண்டல செயலாளர் செபாஸ்டியன் தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர் நசீர் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் சையது இப்ராஹிம் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஊட்டி அரசு போக்குவரத்து கழக ஊட்டி கிளை 2ல் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்  சீனியாரிட்டிக்கு ஏற்ப பணி  வழங்கிட வேண்டும். பொது  மேலாளரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் கிளை மேலாளரிடம் தீர்வு காணுமாறு  அவர் அறிவுறுத்தியும், ஊட்டி கிளை 2 மேலாளர் தொழிலாளர் விரோத போக்குடன்  செயல்பட்டு வருகிறார்.

மேலும், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க  நிர்வாகிகளையும் உதாசீனப்படுத்துடன் கேவலப்படுத்தியும் வருகிறார். ஊட்டியில் இருந்து திருச்சி, மதுரை செல்லும் பேருந்துகளில் பணிபுரியும்  ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அவர்களின் உழைப்பிற்கேற்ப 3 டூட்டி வழங்காமல்,  ஓய்வின்றி பஸ் இயக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனால், தொலைதூர  பகுதிகளுக்கு ஓய்வின்றியும், தூக்கமின்றியும் பஸ் ஓட்டி வருகின்றனர். பெரிய அளவிலான விபத்து ஏற்பட கூடிய அபாயம் உள்ளது. இந்த நிலையை  மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வழியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: