குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் ஒரேநாளில் 61 பேருக்கு கொரோனா

தாம்பரம்: குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி கல்லூரி விடுதியில் ஏற்கனவே 81 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில், நேற்று கல்லூரி ஆசிரியர்கள் 2 பேர் உட்பட 59 மாணவர்கள் என மொத்தம் 61 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில், பாதிக்கப்பட்ட 61 பேரில் 58 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் எம்.ஐ.டி கல்லூரியில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 142ஆக உயர்ந்துள்ளது.  

சிலர் பாதுகாப்புடன் அவர்களது வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.   மற்றவர்கள் கல்லூரி விடுதியிலேயே தங்கி தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதேபோல்,  குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் 232 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனையில், 22 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. நேற்று மதியம் துணிக்கடை மூடப்பட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

Related Stories: