×

டிஐஜி சத்யபிரியா தலைமையில் தொழிற்சாலை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சரக காவல்துறைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளின் மனிதவள மேலாளர்களுடன் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆலோசரனை கூட்டம் நடந்தது. டிஐஜி சத்யபிரியா தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, எஸ்பிக்கள் காஞ்சிபுரம் சுதாகர், திருவள்ளூர் வருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தொழிற்சாலைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், காவல்துறையை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தும்போது, அவர்களது விவரங்கள் அடங்கிய உண்மை தன்மை கோப்புகளை அறிந்து சேர்க்க வேண்டும்.

தொழிலாளர்கள் தங்கும் இடங்களில் குடிநீர், உணவு உள்பட அடிப்படை வசதிகளை உறுதிபடுத்தி நடைமுறைபடுத்த வேண்டும். மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து ஆகிய செயல்களில் ஈடுபடுவோர் பற்றி, காவல்துறைக்கு, தொழிற்சாலை நிர்வாகம் உடனடியாக தெரியபடுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டது. இதில், ஹூன்டாய் நிறுவன பொது மேலாளர் தயாநிதி ராகவ், சாம்சங் நிறுவன மனிதவள மேலாளர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DIG Satyapriya ,
× RELATED காஞ்சிபுரம் சரகத்தில் 36 சிறப்பு...