போக்குவரத்து பாதிப்பு கொரோனா தடுப்பூசி செலுத்த வந்த மருத்துவ குழுவினருக்கு மலர் தூவி வரவேற்பு

தஞ்சை, ஜன.8: தஞ்சை அருகே கொரோனா தடுப்பூசி போட பள்ளிக்கு வருகை தந்த மருத்துவ குழுவினரை மலர் தூவி ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்றனர். தஞ்சை அருகே ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மருத்துவர் சத்யா தலைமையிலான குழுவினர் வருகை தந்தனர். அவர்களை ஒன்றிய குழு உறுப்பினர் லதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலு, தலைமை ஆசிரியர் வெங்கடாசலபதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் மலர்தூவி வரவேற்றனர். அன்பான ஆசிரியர்கள், மாணவர்களின் வரவேற்பை கண்டு மருத்துவக் குழுவினர் நெகிழ்ந்தனர். இதையடுத்து முகாமில் 60 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Related Stories: