காலமுறை ஊதியம் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை,ஜன.8: காலமுறை ஊதியம் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணிநிரந்தரம், பணிவரன்முறை, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியூ சார்பில், தஞ்சாவூர் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வீரையன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், முறைசாரா தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார், டாஸ்மாக் சங்க மாவட்ட பொருளாளர் மதியழகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து தொழிலாளர் துறை துணை ஆணையரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

Related Stories: