ஊராட்சி செயலாளரை தாக்கியவரை கைது செய்ய கோரி ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை, ஜன.8: பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திட்டக்குடி ஊராட்சி செயலாளராக இருப்பவர் கவுரி (32). இவர் நேற்று திட்டக்குடி ஊராட்சி அலுவலகத்தில் பணியில் இருக்கும் போது அதே திட்டக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் எனக்கு வீடு கொடுக்கப்படவில்லை என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது தாக்குதலை தடுக்க சென்ற தூய்மை காவலர் ஜெயராணியையும் திட்டி தாக்கியும் இருவரையும் அரசு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.

இது குறித்து ஊராட்சி செயலாளர் கவுரி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் ஊராட்சி செயலாளர் கவுரி தாக்கப்பட்டததை கண்டித்தும், ஊராட்சி செயலாளர் மற்றும் தூய்மை காவலரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: