×

கீரனூரில் குடியிருப்பு பகுதி மாணவர்களுக்கான இல்லம் தேடி கல்வி திட்ட மையம் தொடக்கவிழா

புதுக்கோட்டை, ஜன.8: கீரனூரில் புஷ்பநகர் குடியிருப்பு பகுதி உயர் தொடக்கநிலை மாணவர்களுக்கான இல்லம் தேடி கல்வி மையம் தொடக்கவிழா அரசு உதவிபெறும் சகாயமாதா நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. அனைவரையும் பள்ளித்தலைமை ஆசிரியை அருட்சகோதரி சாந்தா வரவேற்று பேசினார். விழாவில் அரசு வழக்கறிஞர் அண்ணாதுரை, வார்டு உறுப்பினர் சின்னதுரை, லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்த ஜான்கெடி, நடராஜன், மணி ஆகியோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினர்.

இல்லம் தேடிகல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜெயராம், சவரிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் அவசியம் குறித்தும், தன்னார்வலர்களின் பணிகள் குறித்தும் விளக்கிப் பேசினர். விழாவில் தன்னார்வ ஆசிரியர் சஹானாபேகத்திடம் அரசு வழக்கறிஞர் அண்ணாதுரை இல்லம் தேடி கல்வி மைய கற்றல் உபகரணங்களை வழங்கினார். பள்ளி ஆசிரியை அல்போனஸ் நன்றி கூறினார். விழாவில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வ ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Education Project Center Opening ,Keeranur ,
× RELATED கீரனூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது