ஆண்டிமடத்தில் செயல்படாத ஏடிஎம் மையம்

ஆண்டிமடம், ஜன.8: ஆண்டிமடத்தில் செயல்படாத ஏடிஎம் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பு அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம்மில் அரசு அலுவலர்கள்,பென்ஷனர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வருபவர்கள் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த ஏ.டி.எம் மையம் செயல்படாமல் மூடியே உள்ளது. இதனால் அரசு அலுவலர்கள், முதியவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இந்த ஏடிஎம் தொடர்ந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: