நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம்

நாகை, ஜன.8: நாகை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். நாகை நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு பால்பண்ணைச்சேரி தியாகராஜா நகரிலும், நாகூர் பாத்திமா பள்ளி வளாக பகுதியிலும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் நேரடியாக சென்று பார்வையிட்டார். இதை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவையும் மற்றும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டார்.

மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவையும் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டார். மருத்துவ பொருட்கள் வைப்பறையில் முகக் கவசம் மற்றும் இதர மருத்துவ பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக நாகை நகராட்சி காடம்பாடி பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையிலும், தெற்கு பால்பண்ணைச்சேரி பொதுப்பணியாளர்கள் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதை ஆய்வு செய்தார்.

Related Stories: