அரவக்குறிச்சி அருகே வாலிபர் தற்கொலை

அரவக்குறிச்சி, ஜன. 8: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் பாடியூரை சேர்ந்தவர் கார்த்திக்குமார்(39). இவருக்கு இன்னும் திருமணம் ஆகாததாலும், சரியான தொழில் அமையாததாலும் விரக்தியில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியான ரங்கமலை கணவாய் காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இவர் தற்கொலை செய்து கொண்ட விவரம் தெரியாத நிலையில், நேற்றுமுன்தினம் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் தூக்கில் கார்த்திக்குமார் தொங்குவதை பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: