பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்வு

கிருஷ்ணராயபுரம், ஜன. 8: கிருஷ்ணராயபுரம் அருகே பஞ்சப்பட்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய பேரவை கூட்டம் செயலாளர் ஆண்டியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வருதல், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து பஞ்சப்பட்டியை தலைமை இடமாக கொண்டு தனி ஊராட்சி ஒன்றியமாக அமைத்தல், பஞ்சப்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு மருத்துவர் வருகை உறுதிப்படுத்துதல், பஞ்சப்பட்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதிய மருத்துவர்கள் மற்றும் போதிய உபகரணங்கள் வழங்கி அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் போன்ற 8 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் தங்கவேல், மாவட்ட துணைத் தலைவர் செல்வம், ஒன்றிய தலைவர் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: