கூட்டாம்புளியில் கனிமொழி எம்பி பிறந்தநாள்

ஏரல், ஜன.8: வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாளை முன்னிட்டு கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள் ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலக்காப்பகத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சாயர்புரம் நகர செயலாளர் அறவாழி தலைமை வகித்தார். ஏரல் நகர செயலாளர் பார்த்திபன், சிறுத்தொண்டநல்லூர் செயலாளர் கொற்கைமாறன் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் முதியோருக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் ஆனந்த், சாயர்புரம் நகர துணைச்செயலாளர் கிறிஸ்டோபர், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் கண்ணன், வார்டு செயலாளர் ஆனந்த்சிங், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, நகர மாணவரணி அமைப்பாளர் சசிகுமார், சிறுத்தொண்டநல்லூர் பத்மநாதன், அலிஅக்பர் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் பிஜி ரவி தலைமையில் திமுகவினர் செய்திருந்தனர்.

Related Stories: