சிவகாசி தெய்வானை நகர் கிருதுமால் ஓடையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் சாலைகள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருவில்லிபுத்தூர், விருதுநகர் சாலைகள் அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதேபோல் கழிவுநீர் ஓடைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சி தெய்வானை நகர் பகுதியில் உள்ள கிருதுமால் ஓடை தடுப்பு சுவர் சேதமடைந்ததால் மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் சாலைகள் நீரில் அரிக்கப்பட்டு சேதடைந்து வந்தன. தெய்வானை நகர் கிருதுமால் ஓடையில் அமைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இங்கு புதிய பாலம் அமைக்கவும், கிருதுமால் ஓடையில் இடிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைக்கவும் டெண்டர் விடப்பட்டு தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

தெய்வானை நகர் கிருதுமால் ஓடையில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் தடுப்புசுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் கிருதுமால் ஓடையில் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகளும் நடபெற்று வருகிறது. ெதய்வானை நகரில் தற்போது புதிய சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க ேவண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: