திருவில்லிபுத்தூர் ரேஷன் கடைகளில் சப்கலெக்டர் ஆய்வு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அறியும் வகையில் சிவகாசி சப்கலெக்டர் பிருத்விராஜ் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். திருவில்லிபுத்தூர் கீழரத வீதி கடை எண் 2, ஊரணிப்பட்டி ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய சப்கலெக்டர், குடும்ப அட்டைதாரர்களுக்க பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். அப்போது சிறப்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வரும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆய்வின் போது தாசில்தார் ராமசுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன், மண்டல துணை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வு முடிந்ததும் சப்கலெக்டர் பிருத்விராஜ், வருவாய் துறை அதிகாரிகளிடம் இன்று (ஜன.7) முதல் மம்சாபுரம் பகுதியிலுள்ள 8 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டார். அதன்படி மம்சாபுரம் பகுதி ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

Related Stories: