வெற்றிலை ஆராய்ச்சி மையத்தைமிழக அரசு துவக்க வேண்டும்: பெரியகுளம் விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம், சின்னமனூர், போடி, கம்பம் உள்ளிட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் மருத்துவ குணம் வாய்ந்த நாட்டு வெற்றிலையை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் வெற்றிலை விவசாயத்திற்கு இதுவரையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படாமல் உள்ளது. மேலும் வெற்றிலை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக சார்பில் நடத்தப்பட்ட உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வெற்றிலை விவசாய சங்கத்தின் சார்பில் வெற்றிலை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வெற்றிலை பயிர் காப்பீட்டு திட்டம், வெற்றிலை ஆராய்ச்சி நிலையம், வெற்றிலை விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி கடன் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திமுக தேர்தல் அறிக்கையில் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கி உள்ள நிலையில் வெற்றிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்று காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து வெற்றிலை விவசாயிகள் கூறுகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மருத்துவக் குணம் வாய்ந்த வெற்றிலை விவசாயத்தை காத்திட வெற்றிலையை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவேண்டும், வெற்றிலை ஆராய்ச்சி மையம் கட்டுதல், கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: