கழிப்பறையை கழுவ சொல்லும் ஆசிரியர்கள்:தேனி கலெக்டரிடம் புகார்

தேனி: சின்னமனூர் அருகே கன்னியம்பட்டியில் பள்ளி மாணவ, மாணவியர்களை ஆசிரியர்களின் கழிப்பறையை கழுவச்சொல்வதாக தேனி கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.  இந்திய மாணவர் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் நாகராஜ் மற்றும் செயலாளர் வேலுபிரபாகரன் ஆகியோர் நேற்று மாலை தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இம்மனு குறித்து மாணவர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சின்னமனூர் அருகே உள்ள கன்னியம்பட்டியில் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி உள்ளது.

இங்கு இரு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 16 மாணவ,மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கான கழிப்பறையை மாணவ, மாணவியர்கள் சுத்தம் செய்ய வற்புறுத்தி வருகின்றனர். எனவே, ஆசிரியர்களுக்கான கழிப்பறையை சுத்தம் செய்ய பணித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Related Stories: