சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இணைந்து நடத்தும் 2021-2022ம் ஆண்டிற்கான லீக் போட்டிகள்  காரைக்குடி அழகப்பா உடற்கல்வி உமையாள் திடலில் துவங்கியது. போட்டிகளை அழகப்பா பல்கலைக்கழக முனைவர் சேகர்(பதிவாளர் பொறுப்பு) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி உதவிப்பேராசிரியர்  சுந்தர் லந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: