×

இல்லம்தேடி கல்வி திட்ட தொடக்க விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சியில் வாராப்பூர், குரும்பலூர் நடுநிலைப் பள்ளியிலும், கட்டையன்பட்டி தொடக்கப் பள்ளியிலும் இல்லம்தேடி கல்வி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி தொடங்கி வைத்தார். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை வரவேற்றார். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் எளிதாக கல்வி கற்பது, முக்கியத்துவம் குறித்து பேசினர். ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சித்ரா தன்னார்வல ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். புழுதிப்பட்டி அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.

தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் வரவேற்றார். இதில் இல்லம் தேடி கல்வி உறுதிமொழி எடுக்கப்பட்டது. உதவியாசிரியர் ஜெபஸ்டின், மீனாராணி, தன்னார்வலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி கல்லம்பட்டியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் இந்திராதேவி, கலைச்செல்வி தலைமை வகித்தனர். வளமைய மேற்பார்வையாளர் சேவுகமூர்த்தி வரவேற்றார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ஞான விநாயகம், பாக்கிய குமார் மற்றும் கல்லம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Homecoming Education Project Opening Ceremony ,
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...