கஞ்சா பதுக்கிய ஆந்திர வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை எஸ்ஐ சதீஸ் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு பேருந்தில் இருந்து இறங்கிய நபர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். உடனே, அவரை மடக்கி பிடித்து சோதனையிட்டதில் 500 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் நல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவரான கொண்டாரெட்டி(38) என்ற அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: