மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் வரும் 20, 25 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 தாலுகாக்களிலும், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, வரும் 20ம் தேதி(வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு ஓசூர் தாலுகா கெலவரப்பள்ளியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. இதேபோல், வரும் 25ம் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு, பர்கூர் தாலுகா பாலேப்பள்ளி அருகே உள்ள சிந்தகம்பள்ளி கிராமத்தில் டிஆர்ஓ ராஜேஸ்வரி தலைமையிலும், வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு போச்சம்பள்ளி தாலுகா அனகோடியிலும், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி கொத்தனூரிலும், ஊத்தங்கரை தாலுகா ஆனந்தூரிலும், அஞ்செட்டி தாலுகா எருமுத்தனப்பள்ளி கிராமத்திலும், சூளகிரி தாலுகா போகிபுரம் கிராமத்திலும், கிருஷ்ணகிரி தாலுகா போலுப்பள்ளி அருகே உள்ள பி.கே. பெத்தனப்பள்ளி கிராமத்திலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த முகாம்களில் தவறாமல் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: