வெள்ளகோவில் வாரச்சந்தையில் புகையிலை விற்றவரிடம் லஞ்சம் வாங்கிய ஊர்க்காவல் படையினர்

திருப்பூர்:  திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை  வாரச்சந்தை நடைபெறும். இந்நிலையில் கடந்த வாரம் நடந்த சந்தையின்போது  அங்குள்ள ஒரு கடையில் புகையிலை விற்ற ஒருவரை போலீசார் கைது செய்து பறிமுதல்  செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் வெள்ளகோவில் போலீசாரிடம்  கேட்டனர். ஆனால் தாங்கள் இது தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்யவில்லை என தெரிவித்தனர்.

இதனால்  சந்தேமடைந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் காங்கயம்  ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேர் சாதாரண உடையில் சென்று புகையிலை பொருட்கள் விற்பனை  செய்தவரை கைது செய்து, பணத்தை பெற்றுக்கொண்டு அவரை விடுவித்தது  தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட எஸ்பிக்கு அறிக்கை அனுப்ப வெள்ளகோவில் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: