ஊட்டி ஹோபார்ட் பள்ளி தடுப்புச்சுவர் கட்டும் பணி துவக்கம்

ஊட்டி: ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள பழுதடைந்திருந்த ஹோபார்ட் நடுநிலைப் பள்ளி தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டு புதிதாக தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் நெல்லையில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிதழந்தனர். இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த தடுப்பு சுவர், கட்டிடங்கள் உள்ளனவா? என்பது குறித்த ஆய்வை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திலும் இது போன்ற கட்டிடங்கள் உள்ளதா? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை துவக்கினர். இந்நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி ஹோபார்ட் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி தடுப்புச்சுவர் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தால், பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் விபத்து அபாயம் ஏற்படும் நிலை இருந்தது

Related Stories: