×

கலெக்டர் ஆபீஸ் பகுதியில் குழாய் பதிப்பு பணி: குழியில் சிக்கி வாகனங்கள் திணறல்

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருேக ஸ்டேட் பாங்க் ரோட்டில் 600 மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய் பதிப்பு பணி நடக்கிறது. சில இடங்களில் 800 மிமீ விட்டம் கொண்ட குழாய்களை பதித்து மண் போட்டு மூடியுள்ளனர். இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

வரும் 12ம் தேதி வரை பணி நடத்தப்படும். பணி முடிந்து, தார் தளம் அமைத்த பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். ஆனால் சிலர் வாகனங்களில் குழி தோண்டிய பகுதியில் புகுந்து சென்று வந்தனர். அப்போது இரண்டு கார், ஒரு ஆட்டோ மற்றும் சில இரு சக்கர வாகனங்கள் இலகவான மண்ணில் புதைந்தது. வாகனங்கள் மண்ணில் இறங்கிய பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியே வந்தது.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்