×

முன்னாள் எம்பி சித்தமல்லி எஸ்ஜி முருகையன் 43வது நினைவு நாள் அனுசரிப்பு

மன்னார்குடி, ஜன.7: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான தியாகி எஸ்ஜி முருகையனின் 43வது நினைவு நாள் மன்னார்குடி அருகே சித்தமல்லி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சித்தமல்லியில் உள்ள தியாகி எஸ்ஜிஎம் நினைவு கொடிக்கம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கொடியேற்றி வைத்து அவரின் நினைவிடத்தில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீப சுடரை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்று தியாகி எஸ்ஜிஎம் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், மாலைகள் அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர். இதில், நாகை எம்பி எம்.செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் வை.சிவபுண்ணியம், பழனிச்சாமி, கோட்டூர் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, நடைபெற்ற ரத்ததானம் மற்றும் கண்தான முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், முற்போக்கு இயக்கங்களின் நிர்வாகிகள், பல்வேறு கிராம ங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அணி அணியாக வந்து தியாகி எஸ்ஜிஎம் நினைவு ஸ்தூபி யில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். ஏற்பாடுகளை தியாகி எஸ்ஜி முருகையனின் மகன்கள் எஸ்ஜிஎம். ரமேஷ், எஸ்ஜிஎம். லெனின், எஸ்ஜிஎம். பூபேஷ்குப்தா மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags : MP Chittamalli SG Murugaiyan ,
× RELATED பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு