×

நீடாமங்கலத்தில் தமுமுக, மமக ஆலோசனை கூட்டம்

நீடாமங்கலம், ஜன.7: நீடாமங்கலம் அருகில் உள்ள பொதக்குடி தமுமுக, மமக அலுவலகத்தில் அதன் கிளைத் தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதக்குடி மற்றும் ஆய்குடி ஊராட்சியில் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் சரி செய்யாததை கண்டித்து வருகிற 26ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது, தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையெடுத்து அரசு அறிவித்துள்ள துணிப்பைகளை அனைவரும் மஞ்சள் துணிப் பையை பயன்படுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் தமுமுக கிளை செயலாளர் நூர்முஹம்மது, தமுமுக, மமக பொருளாளர் முஹம்மது உஸ்னான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamumuka ,Mamaka ,Needamangalam ,
× RELATED திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி