×

வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் காட்சிப்பொருளானது சோலார் மின் விளக்கு

வலங்கைமான், ஜன.7: வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் பலஆயிரம் செலவு செய்து அமைக்கப்பட்ட சோலார் எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். காட்சிப்பொருளாக மாறி விட்ட சோலார் விளக்கை எரிய வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் அவசரகதியில் வலங்கைமான் பேரூராட்சி பகுதிகளில் சோலார் மின் விளக்குகள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இவை வாதம்ஸ் கார்டன், கோல்டன் சிட்டி குச்சிபாளையம் சந்து, குடமுருட்டி வழிநடப்பு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டது. இதில் உண்ணாமலை அம்மன் கோயிலில் இருந்து குடமுருட்டி வழிநடப்பு செல்லும் பகுதியில் அரசு மதுபானக் கடைக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்ட சோலார் மின்விளக்கு பல மாதங்களாக எரியவில்லை என்று கூறப்படுகிறது. பல ஆயிரம் செலவு செய்து அமைக்கப்பட்ட சோலார் விளக்கு அமைத்த நாள் முதல் நாள் முதலே எரியாமல் வெறும் காட்சிப் பொருளாக உள்ளது. எனவே எரியாமல் உள்ள சோலார் மின் விளக்கை உடனடியாக சரி செய்துதர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Valangaiman Municipality ,
× RELATED அரசு பள்ளி கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு