சேகல், கொருக்கை ஊராட்சி பகுதியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட துவக்க விழா

திருத்துறைப்பூண்டி, ஜன.7: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சேகல் ஊராட்சியில் தீவாம்பாள்பட்டினம் அங்கன்வாடி மையத்தில் இல்லம் தேடிக் கல்வி துவக்க விழா நடைபெற்றது. தன்னார்வலர் ஜெயபாரதி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரஸ்வதி, ஆதிரெங்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பூங்குழலி முன்னிலையில் நடைபெற்றது. இல்லம் தேடிக் கல்வியை துவக்கி வைத்து தன்னார்வலர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர். இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே போல் கொருக்கை ஊராட்சி மேலகொருக்கை குக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் இல்லம் தேடிக் கல்வி திட்ட துவக்க விழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். ஒன்றியகுழு உறுப்பினர் வேதரெத்தினம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மனோகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்த்திகேயன் பள்ளி மேலாண்மைகுழு தலைவர் கன்னிகா பொதுமக்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: