காவிரி உரிமை மீட்புக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜன.7: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில், அணை கட்ட முயற்சித்து வரும், கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வரும் மத்திய அரசு மற்றும் இதுவரை காவிரி பிரச்சனை தொடர்பாக கண்டனம் தெரிவிக்காத தமிழக அரசை கண்டித்தும் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை வணிகர் சங்க துணை தலைவர் வாசுதேவன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்ட முயற்சிக்கிறது. இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும், கர்நாடக அரசு மேகதாது அணை தொடர்பாக அனுமதி பொருள் வைப்பதை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். கடந்த காலங்களில் பாரபட்சமாக செயல்பட்டு வந்த, தற்போதைய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை மத்திய அரசு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: