முதன்மை கல்வி அலுவலர் வேண்டுகோள் பொன்னமராவதி வட்டத்தில் 43 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

பொன்னமராவதி, ஜன.7: பொன்னமராவதி வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணிநாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனோ பரவல் அதிகரிப்பதன் காரணமாக அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும். இதற்காக பொன்னமராவதி பகுதியில் 32இடங்களில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொன்னமராவதி, காரையூர், கொப்பனாபட்டி, மேலைச்சிவபுரி, அம்மன்குறிச்சி, மேலத்தானியம் ஆகிய அரசு ஆரம்பசுகாதார நிலையம், வலையபட்டி அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் நடமாடும் மருத்துக்குழு -4இடங்கள் என பொன்னமராவதி வட்டாரத்தில் 43இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இதுவரை கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொள்ளதாவர்கள் முதல் தடுப்பூசியும், முதல் ஊசி போட்டவர்கள் அற்கான காலம் வந்திருந்தால் இரண்டுவது தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும். நமது பகுதியில் உள்ள 42 கிராம ஊராட்சி மற்றும் பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த தடுப்பூசி முகாமில் பங்குபெற வேண்டுகிறேன்.

Related Stories: