ஆண்டிமடம் பகுதி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க வேளாண் சுற்றுலா

ஆண்டிமடம்,ஜன.7: ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பது குறித்து அறிந்துகொள்ள ஆண்டிமடம் வட்டார விவசாயிகள் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்துக்கு சுற்றுலா சென்றனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் மாநிலத்த்திற்குள்ளான விவசாயிகள் சுற்றுலா இனத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிலையத்தின் தலைவர் அழகேசன் நிலையம் குறித்த தகவல்களை விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். மனையியல் தொழில்நுட்ப வல்லுனர் சிவா ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் வேளாண்மைப் பயிர்கள், காய்கறி மற்றும் பழப்பயிர்கள் சாகுபடி, கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன மேலாண்மை தொழில்நுட்பங்கள் (கோழி,ஆடு ,மாடு வளர்ப்பு) மற்றும் மரங்கள் சாகுபடி செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் கூடுதல் வருமானம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வல்லுனர் பிரேமலதா மற்றும் திருமூர்த்தி ஆகியோர் பண்ணை பார்வையிடுதலின் போது பரண் மேல் ஆடு வளர்ப்பு , அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் தீவன பயிர் சாகுபடி குறித்தும் விளக்கினர் . நிகழ்ச்சிக்கு உதவி தொழில்நுட்ப மேலாளர் குமணன் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் அபிலாஷ் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து உடன் சென்று வந்தனர்.

Related Stories: