திருமுல்லைவாசல் அரசு பள்ளியில் வேட்டி அணிந்து வந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

சீர்காழி, ஜன.7: சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழர்களின் பண்பாட்டை மீட்டெடுக்கவும், நெசவு மற்றும் கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழவும் வேட்டி தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் அனைவரும் கதர் வேட்டி சட்டை அணிந்து பள்ளிக்கு வந்து பணிபுரிந்தனர். ஆசிரியர்கள் வேட்டி அணிந்து பள்ளிக்கு வந்ததை அறிந்த பெற்றோர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களை பாராட்டினர்.

Related Stories: