×

சிசிடிவி கேமரா காட்டிக்கொடுத்தது நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதி மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அபராதம்

நாகை,ஜன.7: நாகை மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தற்போது வேகமாக பரவிவருமம் கொரோனா நோயை கட்டுப்படுத்தவும், மேலும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 9ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். அன்றைய தினம் பொது போக்குவரத்து முற்றிலும் இருக்காது. இருப்பினும் அத்தியாவசிமான பணிகளான மருத்துவப்பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், சரக்கு வாகன போக்குவரத்து, மற்றும் பெட்ரோல், டீசல் பங்குகள், ஏடிஎம் ஆகியவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. மாவட்டத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாதவர்கள் மீது காவல்துறையினர் மூலம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். வெளிமாநிலத்திலிருந்து நாகை மாவட்டத்திற்கு வருகை தருபவர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்து நாகூர் மற்றும் வேளாங்கண்ணி பகுதிக்கு வருகை புரிந்து ஓட்டல்களில், விடுதிகளில் தங்க நேரிட்டால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றை விடுதி உரிமையாளர்களில் காண்பித்து உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் நடைபெற இருக்கும் அனைத்து மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் (திருமணம், பொதுக்கூட்டம் மற்றும் இதர) நிகழ்ச்சிகளுக்கு தாசில்தார் மற்றும் காவல்துறை முன்அனுமதி பெற வேண்டும். சுப நிகழ்ச்சிகளில் திருமண மண்டப உரிமையாளர்கள் 100 சதவீதம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதியில்லை. கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் அனைத்து சேவைத்துறைகள் போன்ற பொதுமக்கள் செல்லுமிடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமைமயாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். உணவகங்கள், விடுதிகள், பேக்கரி, தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த வேண்டும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகப்பட்சம் 100 நபர்களுடன் நடத்தலாம். கொரோனா நோய் தொற்று தொடர்ந்து கண்காணிக்கப்படும். விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : Naga district ,
× RELATED நாகை மாவட்டத்தில் பண்ணை குட்டைகளில்...