×

தோகைமலை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பணிகள் தீவிரம்

தோகைமலை, ஜன. 7: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரின் உத்தரவை அடுத்து தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்தும் பணிகளை தீவிரமாக நடைமுறைபடுத்தி வருகின்றனர். தனித்தனியே நடைபெற்ற விழிப்புணரவு நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை வகித்தனர். தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் அனைத்து வணிகர்களும், பணியாளர்களும் தங்களது கடையில் வியாபாரம் செய்யும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருப்பதோடு, பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மேலும் அடிக்கடி கிருமிநாசினி தெளிப்பது, கையை அடிக்கடி சோப்பு போட்டு கழுவும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். 100 நாள் பணியாளர்கள் சமூக இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும். அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவதையும், ஓய்வு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒன்றிய ஆணையர் சரவணன், மங்கையர்க்கரசி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருஞானம், ரவிச்சந்திரன், விவேகானந்தன் பானுமதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags : Tokaimalai ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...