×

தூத்துக்குடி, கோவில்பட்டியில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி, ஜன.7: மாநில திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு துணைத்தலைவருமான கனிமொழி எம்பி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் ஏற்பாட்டில், மாவட்ட மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடந்தது. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி முன்னிலை வகித்தனர். விழாவில், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, 6பெண்களுக்கு தையல் இயந்திரம், 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, பகுதி அமைப்பாளர்கள் ரேவதி, கவிதா உட்பட பலர் பங்கேற்றனர். தூத்துக்குடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு ஒன்றிய பொறுப்பாளர் புதூர் சுப்பிரமணியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் முடிவைஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் முத்துசாமி, கணேசன், கண்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் நாராயணன், மாரியப்பன், மகளிரணி அபிராமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துலெட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

கோவில்பட்டி : திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளரும், மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை வழக்கறிஞருமான குரு.செல்லப்பா தலைமையில் கோவில்பட்டி ராஜீவ்நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து புதுரோட்டில் உள்ள அலுவலகத்தில் நலிந்த நகை தொழிலாளர்கள், மகளிர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி பை வழங்கப்பட்டது. சிப்பிப்பாறை கிறிஸ்துநாதர் ஆலயம் எச்எம்எஸ் மிஷினரி சார்ந்த சமூக பணியாளர் ரூபராஜ் மூலம் ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியரும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வாகன ஓட்டுநருமான டாக்டர் கதிரேசன் முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, போட்டி தேர்வுக்கான புத்தகங்களை மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் குரு.செல்லப்பா வழங்கினார். ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. ஏரல்:  ஏரல் அருகே பழையகாயலில் திமுக சார்பில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பிரதிநிதி ஜெயசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 400 பெண்களுக்கு இலவச சேலை வழங்கினார். இதில் செயலாளர்கள் ஜாண்சன், சேவியர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் காட்வின்ராஜா, வர்த்தக அணி துணை அமைப்பாளர் சங்கர், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் முகமது, நிர்வாகி மும்பை மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Kanimozhi ,Kovilpatti ,Thoothukudi ,
× RELATED கனிமொழி எம்பியை ஆதரித்து கோவில்பட்டி,...