தூத்துக்குடி மாவட்டத்தில் முடி திருத்தும் கட்டணம் உயர்வு

தூத்துக்குடி, ஜன.7:  தூத்துக்குடி மாவட்டத்தில் முடி திருத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் தூத்துக்குடி பிரையண்ட் நகரில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மனோகரன், பொருளாளர் சித்திரைவேல், துணைத்தலைவர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் நல்லதம்பி வரவேற்றார். கூட்டத்தில், ஜனவரி முதல் முடி திருத்தும் கட்டணத்தை கட்டிங் சேவிங் ரூ.170, சேவிங் மட்டும் ரூ.80, கட்டிங் மட்டும் ரூ.120, சிறுவர் கட்டிங் ரூ.100, கட்டிங், சேவிங், டையிங் ரூ.300, டையிங் மட்டும் ரூ.150 என மாற்றி அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: