அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 34 பேரை பணிநீக்கம் செய்யக்கூடாது

சிதம்பரம், ஜன. 7:   சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 34 பேர் உள்ளனர். இவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாமலைப்பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி ஆசிரியர் மற்றும் பணியாளர் நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் விஜய், நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயிலில் கருணை அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுடன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 34 பேர் கருணை அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்டனர்.  ஆனால் அவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அரசாணைப்படி அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். தற்போது இவர்களுக்கு பணி இருக்காது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக 34 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் பல்கலைக்கழகத்தில் பணி நிரவலில் சென்ற ஊழியர்களின் நலன் காக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் நடந்துள்ள குளறுபடிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories: