×

(தி.மலை) குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டில்


கண்ணமங்கலம், ஜன.7: கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முகாமிற்கு திமுக அவைத்தலைவர் தேங்காய் மண்டி ரமேஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சுகுணா நாராயணன், விஏஓ ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணைத்தலைவர் மாதவன் வரவேற்றார். தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட கரும்புடன் கூடிய 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கொங்கராம்பட்டில் திமுக நிர்வாகிகள் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அப்போது அவைத்தலைவர் ரமேஷ் பேசுகையில், கொங்கராம்பட்டில் 833 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்கள் சிரமமின்றி பொருட்களை பெறும் வகையில் தினசரி ஒவ்வொரு பகுதி மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலின்றி மக்கள் மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த விற்பனையாளர் லதாவிற்கு பொதுமக்கள் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் கிராம மக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் விற்பனையாளர் லதா நன்றி கூறினார்.

செங்கம்: புதுப்பாளையம் பேரூராட்சியில் 12 வார்டுகளில் சேர்ந்த பொதுமக்களுக்கு நேற்று புதுப்பாளையம் பேரூராட்சி உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை புதுப்பாளையம் ஒன்றிய குழுத்தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கி வழங்கினார். உடன் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், ஒன்றிய கவுன்சிலர்கள் முனியப்பன், பாரதிதாசன், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், கூட்டுறவு சங்கத் தலைவர் பிரான்சிஸ், மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், நகர துணை செயலாளர் முருகன், உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : T.Malai ,Kongarampattu ,Kannamangalam ,
× RELATED டிரோன் கேமரா உதவியுடன் போலீசார் சாராய வேட்டை