இணையதளத்தில் ஆர்டிபிசிஆர் மைய விவரம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள 21 முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, கோவிட் தொற்று அறிகுறியுள்ள நபர்கள், தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை, தொற்று பாதித்த நபர்கள் முதற்கட்ட உடற்பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதியில்லாத நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மாநகராட்சியின் கோவிட் பாதுகாப்பு மையங்களின் அமைவிடத்தை தெரிந்து கொள்ளவும் மற்றும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நபர்கள் தடுப்பூசி மையங்களின் விவரங்களை அறிந்து கொள்ள சென்னை மாநகராட்சியின்  //covid19.chennaicorporation.gov.in/covid/home/ என்ற இணையதள இணைப்பில் சென்று அறிந்து கொள்ளலாம்.

Related Stories: