சிவகங்கையில் வட்டார குழந்தைகள் பாதுகாப்புகுழு கூட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தலைமையில் நடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ஜார்ஜ் முன்னிலை வகித்தார். ஆணையாளர் உமாமகேஸ்வரி வரவேற்றார். சிவகங்கை வட்டாரத்தில் வரும் காலங்களில் குழந்தைகள் சார்ந்த பிரச்னைகளை தவிர்க்கும் வகையில் குழந்தைகள் சார்ந்த அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருமண பத்திரிக்கையில் திருமண வயதை பதிவு செய்வது, திருமணத்திற்கு அடிக்கப்படும் விளம்பர பதாகையில் பெண்களின் திருமண வயது 18 என்பதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விஜயா, குழந்தைகள் நல குழுத் தலைவர் சரளா கணேஷ், உறுப்பினர் ரசீந்திரகுமார், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, இல்லம் சார்ந்த பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகள் சார்ந்த பிரச்னைகள் வரும் போது குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் 04575240166 என்னை தொடர்பு கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: