×

தேனி மாவட்டத்தில் மக்களுக்கு மாஸ்க் வழங்கி போலீசார் விழிப்புணர்வு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கம்பம்:தேனி மாவட்ட போலீசார், வீதிதோறும் சென்று ஆட்டோ மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை தொற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஒமிக்ரான் என்ற பெயரில் பரவி வருகிறது. நோய் பரவலை தடுக்க தமிழக அரசு தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடனும் முகக் கவசங்கள் அணிந்தும் செல்ல அரசு வலியுறுத்தி வருகிறது. தேனி அல்லி நகரத்தில் எஸ்என்ஆர் ஜங்சன் பகுதியில் நேற்று எஸ் முகமது யாகியா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

இந்நிலையில் கம்பம் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லாவண்யா உத்தரவில் எஸ்.ஐ ஜெயபாண்டி தலைமையில் போலீசார், கம்பம் நேதாஜி அறக்கட்டளையினர் உடன் இணைந்து ஆட்டோவில் மைக்செட் கட்டி பொதுமக்கள் அதிகமாக கூடும் கம்பம் உழவர் சந்தை, பார்க் திடல், அரசமரம் பகுதி மற்றும் கடைகள் அதிகமாக உள்ள பகுதிகளில் சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை விளக்கி முகக்கவசம் அணியாமல் செல்வர்களுக்கு முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், அடுத்து முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கின்றனர்.

Tags : Theni district ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...